

மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பை கண்டித்து ஓட்டல்களும், ஆன்லைனில் மருந்து விற் பனைக்கு அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி மருந்து வணிகர்களும் நேற்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓட்டல்கள் மூடப்பட்டதால் வெளி மாநிலங்களில் இருந்து திருமலை திருப்பதிக்கு வந்த பக்தர்கள் பசியாற முடியாமல் ஓட்டல்களை தேடி அலைந்தனர்.
இதைத் தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்கள் பசியாற உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி திருப்பதி நகரில் உள்ள முக்கிய பஸ் நிலையங்கள், ரயில் நிலையம், அலிபிரி மலைப்பாதை உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்பட்டது.