

மண்ணெண்ணெய் உபயோகப் படுத்தாத மாநிலமாக ஆந்திரா உருவாகி இருப்பதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அறிவித்தார்.
ஆந்திர மாநிலத்தின் விஜய வாடா நகரில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் பேசியதாவது:
இனி வாரம் ஒருமுறை மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் நடத்தப்பட்டு, மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். அரசு துறைகளில் தகவல் பரிமாற்றம் நத்தை வேகத்தில் உள்ளது. இதை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும். 5 ஆண்டு காலத்தில் ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித் தரவேண்டும் என்பது அர சின் குறிக்கோள். அது நிறை வேற்றப்பட வேண்டும். மண் ணெண்ணெய் உபயோகப்படுத் தாத மாநிலமாக ஆந்திரா உருவாகி உள்ளது. ஆந்திராவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு ‘தீபம்’ திட்டத்தின் கீழ் சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட்டது. 15 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ் அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் காஸ் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது.
இதன் விளைவாக மண்ணெண் ணெய் உபயோகம் முற்றிலுமாக இல்லை. ஆதலால் ரேஷன் கடை களில் வழங்கப்பட்டு வந்த ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் இனி வழங்கப்படாது. நூறு நாள் வேலை திட்டத்தில் ஆந்திர மாநிலம் நாட்டின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. மின் தட்டுப்பாடு இல்லாத மாநிலமாகவும் ஆந்திரா விளங்குகிறது. மேலும் தற்போது மின்சாரத்தை மிச்சப்படுத்தும் அளவு நாம் முன்னேறியுள்ளோம்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.