

நாடாளுமன்ற பாஜக குழுத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்படி மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளின் பாஜக குழுத் தலைவராக மோடி செயல்படுவார். மக்களவை பாஜக குழு துணைத் தலைவராக ராஜ்நாத் சிங்கும் மாநிலங்களவை துணைத் தலைவராக அருண் ஜேட்லியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற இருஅவைகளின் தலைமை கொறடாவாக வெங்கய்ய நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவை பாஜக துணை கொறடாவாக சந்தோஷ் கங்வாரும் மாநிலங்களவை துணை கொறடாவாக பிரகாஷ் ஜவடேகரும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
மக்களவை தலைமை கொறடாவாக அர்ஜுன் ராம் மேக்வாலும் மாநிலங்களவை தலைமை கொறடாவாக அவினாஷ் ராய் கன்னாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.