இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட எல்லையில் ஊடுருவிய ஹிஸ்புல் தீவிரவாதி கைது

இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட எல்லையில் ஊடுருவிய ஹிஸ்புல் தீவிரவாதி கைது
Updated on
1 min read

இந்திய நேபாள நாடுகளுக்கு இடையில் 1,751 கி.மீ. எல்லைப் பகுதியை எஸ்எஸ்பி என்ற சிறப்பு ஆயுதப் படை போலீஸார் பாதுகாத்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் படை பிரிவினர் உத்தரபிரதேச நேபாள எல்லையில் நேற்று முன்தினம் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி ஒருவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்து எஸ்எஸ்பி செய்தித் தொடர்பாளர் நேற்று கூறியதாவது:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரம்பான் மாவட்டத்தில் உள்ள பனிஹால் பகுதியைச் சேர்ந்தவர் நசீர் அகமது (34). காஷ்மீரில் எஸ்டிஎப் முகாம் உட்பட பல்வேறு தீவிரவாத தாக்குதலில் இவருக்கு தொடர்புள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் தங்கியிருந்துள்ளார். கடந்த 10-ம் தேதி பாகிஸ்தானின் பைசலாபாத் தில் இருந்து ஷார்ஜா சென்றுள் ளார். அங்கிருந்து நேபாள தலை நகர் காத்மாண்டுவுக்கு சென்றுள் ளார். அங்கிருந்து உத்தரபிரதேச எல்லை வரை பேருந்தில் வந்துள் ளார். காஷ்மீர் சால்வைகள், தரை விரிப்புகளை விற்பவர் போல் உ.பி. மாநிலம் சோனாலி பகுதிக்குள் ஊடுருவ முயன்ற போது எல்லையில் முகாமிட்டுள்ள எஸ்எஸ்பி படையினர் அவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் அடையாள அட்டை உட்பட எந்த ஆவணங்களும் இல்லை. சந் தேகம் வலுத்ததால் நசீர் அகமது பற்றி தீவிரமாக விசாரித்தோம். அப்போதுதான் அவர் ஹிஸ்புல் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதியானது.

இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட பாகிஸ் தானில் உள்ள ஹிஸ்புல் அமைப் பினர் பல்வேறு சதி திட்டங்களைத் தீட்டி நசீரை அனுப்பி உள்ளனர். இந்தியாவில் இருக்கும் கூட்டாளி யுடன் நசீர் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். அவர்தான் நசீரின் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்து உதவியுள்ளார். கூட்டாளி சொல்லியபடி நசீர் நேபாளம் வழியாக ஊடுருவ முயன்றுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இவ்வாறு எஸ்எஸ்பி செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in