

கடந்த 2016 ஜனவரியில் பாகிஸ் தான் தீவிரவாதிகள் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படைத் தளம் மீது தாக்குதல் நடத்தினர்.
இதில் 7 வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.இதைத் தொடர்ந்து எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று குருதாஸ் பூரின் பாரியாலா பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் பாகிஸ்தான் பகுதியில் இருந்து பஞ்சாபுக்குள் ஊடுருவ முயற்சி செய்வது தெரியவந்தது. அந்தப் பகுதியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அங்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.