இந்தியாவில் இதுவரை 238 நகரங்களில் 5ஜி சேவைகள்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புது டெல்லி: கடந்த அக்டோபர் 1 முதல் நம் நாட்டில் 5ஜி சேவையை தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் தொடங்கியது. கடந்த ஜனவரி 31, 2023 நிலவரப்படி 238 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டது. அதாவது, 5-ஜி சேவைகள் அனைத்து உரிம சேவை பகுதிகளில் பரவலாக்கப்பட்டது.

நம் நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் 5ஜி சேவைகள் வழங்குவதற்கான திட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஏல நடவடிக்கை நடைபெறும்.

இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் இன்று மத்திய தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுசிங் சௌகான் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in