

வடக்கு காஷ்மீரில் சுமார் 90 தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறினார்.
இது தொடர்பாக போலீஸ் ஐ.ஜி. முனீர் கான் நேற்று கூறும்போது, “எல்லையில் ஊடுருவல் முயற்சி நடைபெறுவதாக எங்களுக்கு தகவல் வருகிறது. பாரமுல்லா பகுதியில் ஊடுருவலை முறியடிக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளது.
நவ்காம் செக்டாரில் கடந்த வாரம் ஊடுருவல் முயற்சி முறி யடிக்கப்பட்டு 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதே பகுதி யில் மேலும் சில இடங்களில் ஊடுருவல் முயற்சி முறியடிக் கப்பட்டு, தீவிரவாதிகள் விரட்டி யடிக்கப்பட்டுள்ளனர். பண்டி போரா, பாரமுல்லா, குப்வாரா மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு காஷ்மீரில் சுமார் 90 தீவிரவாதிகள் செயல்பட்டு வரு கின்றனர். காவல் துறையை சேர்ந்த ஒருவர் தீவிரவாதியாக மாறினாலும் அவரை தீவிரவாதி யாகவே பார்க்கிறோம்” என்றார்.
நகரில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி நடந்த வன்முறையின்போது, லீதுல் கோகோய் என்ற ராணுவ அதிகாரி தனது ஜீப்பில் இளைஞர் ஒருவரை கட்டிவைத்து ஓட்டிச் சென்றது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில் ஊடுருவல் முறியடிப்பில் சிறப்பாக செயல்பட்டதாக லீதுல் கோகோய்க்கு ராணுவம் விருது வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக முனீர் கான் கூறும்போது, “இளைஞரை மனித கேடயமாக லீதுல் கோகோய் பயன்படுத்தியது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்தச் சூழ்நிலையில் அவர் இவ்வாறு நடந்துகொண்டார் என்பது குறித்து விசாரிக்கப்படும். ராணுவம் விருது வழங்கியிருந்தாலும் எப்ஐஆர் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும்” என்றார்.