Published : 05 Feb 2023 05:14 AM
Last Updated : 05 Feb 2023 05:14 AM

பழங்குடியினருக்கு 4 மடங்கு அதிக நிதி - ஜே.பி.நட்டா தகவல்

அகர்தலா: திரிபுராவில் வரும் 16-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கோமதி பகுதியில் நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

நமது நாட்டின் குடியரசுத் தலைவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். மத்திய அமைச்சர்களில் 8 பேர், திரிபுரா முதல்வர் ஆகியோர் பழங்குடி சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

பழங்குடி மக்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசுபல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பட்ஜெட்டில் பழங்குடியினருக்கு 4 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x