

இந்த ஆண்டு நடப்பு பருவத்தில் இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ‘சார்தாம்’ யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3 லட்சம் பக்தர்கள் அதிகமாகும்.
இதுகுறித்து கார்வால் ஆணையர் வினோத் சர்மா நேற்று கூறும்போது, “இந்த ஆண்டு நடப்பு பருவத்தில் திங்கள் கிழமை வரை 7,10,271 பக்தர்கள், இமயமலையில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆலயங்களுக்குச் சென்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்தப் பருவத்தில் 4,09,016 பக்தர்கள் மட்டுமே யாத்திரை சென்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டை இந்த ஆண்டு இதுவரை 3,01,255 பேர் கூடுதலாக யாத்திரை சென்றுள்ளனர்.
2013-ம் ஆண்டு கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பிறகு உத்தராகண்ட் அரசு மேற்கொண்ட மறுகட்டமைப்பு பணிகளில் மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது” என்றார்.