

பிஹாரில் கடந்த மக்களவை தேர்தலின்போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) வீர்ர்களை கொன்ற 5 மாவோ யிஸ்ட் தீவிரவாதிகளுக்கு முங்கேர் நீதிமன்றம் மரண தண் டனை விதித்துள்ளது.
விபின் மண்டல், ஆதிக்லால் பண்டிட், ரது கோடா, வானோ கோடா, மனு கோடா ஆகிய ஐவ ருக்கும் மரண தண்டனையுடன் தலா ரூ.25,000 அபராதமும் விதித்து கூடுதல் அமர்வு நீதிபதி ஜோதி ஸ்வரூப் ஸ்ரீவத்சவா நேற்று தீர்ப்பு கூறினார்.
பிஹாரின் காரகாபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014 ஏப்ரலில் சிஆர்பிஎப் வாகனத்தின் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுமார் 50 பேர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சோம் கவுடா, ரவீந்திர ராய் என்ற 2 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 10 வீரர்கள் காயம் அடைந்தனர்.