கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் | பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்

அண்ணாமலை | கோப்புப் படம்.
அண்ணாமலை | கோப்புப் படம்.
Updated on
1 min read

புதுடெல்லி: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில தேர்தல் பணிகளை கவனிக்க பொறுப்பாளர், இணை பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பாளராகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பாஜக மாநில பொறுப்பாளராகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை இணை பொறுப்பாளராகவும் நியமித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தற்போது அம்மாநில அரசியலில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மக்களின் குரல் என்ற பெயரிலான யாத்திரையை நடத்தி வருகிறது. இந்நிலையில் பாஜக ஒருபுறம் தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறது. இந்நிலையில் தான் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில தேர்தல் பணிகளை கவனிக்க பொறுப்பாளர், இணை பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in