ஆந்திர காவல் துறையின் 25% கணினி முடக்கம்

ஆந்திர காவல் துறையின் 25% கணினி முடக்கம்
Updated on
1 min read

கடந்த 2 தினங்களாக ‘ரேன்சம் வேர்’ என்ற வைரஸ் மூலம் இணை யதள தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் மருத்துவம், தொலைத்தொடர்பு உட்பட முக்கிய துறைகளின் கணினிகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியா விலும் சில இடங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ஆந்திர காவல் துறைக்கு சொந்தமான கணினிகளே முடக்கப்பட்டுள்ளன. திருப்பதி, சித்தூர், கலிகிரி, திருச்சானூர் உட்பட சித்தூர் மாவட்டத்தில் மட்டும் 9 காவல் நிலையங்களில் உள்ள கணினிகள் முடங்கி உள்ளன.

இதுதவிர, விசாகப்பட்டினம், காகுளம், குண்டூர், விஜயவாடா ஆகிய பகுதிகளில் உள்ள பல காவல் நிலையங்களிலும் கணினி கள் முடக்கப்பட்டன. இதனால் ஆன்லைன் தகவல் பரிமாற்றம் முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது.

இதுகுறித்து மாநில டிஜிபி சாம்பசிவ ராவ் விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

ஆந்திர மாநிலத்தில் கணி னிகள் ‘ஹேக்’ செய்யப்பட் டுள்ளது உண்மைதான். இதன் மூலம் மாநிலத்தில் 25 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் கணினியில் உள்ள தகவல்கள் பாதிக்கப்படவில்லை.

இதனிடையே, கணினி முடக் கத்தை நீக்குவதற்கான ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவிக்க பணம் கொடுக்குமாறு கம்யூட்டர் களில் குறுந்தகவல் வருகின்றன. ஆனால் பணம் கொடுக்க மறுத்துவிட்டோம். இதுகுறித்து கணினி நிபுணர்கள் இரவும் பகலும் ஆராய்ந்து வருகின்றனர். விரைவில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். இதுபோல் பல நாடுகளைச் சேர்ந்த முக்கிய துறை களின் கணினிகள் முடக்கப்பட்டுள் ளன. நம் நாட்டிலும் பல மாநிலங்களில் இந்தப் பிரச்சினை தலை தூக்கி உள்ளது. இவ்வாறு சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.

இதுகுறித்து திருப்பதி நகர எஸ்.பி. ஜெயலட்சுமி செய்தியாளர் களிடம் கூறும்போது, “காவல் துறை கணினிகள் ‘ஹேக்’ செய்யப் பட்டுள்ளன. குறிப்பாக சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி மேற்கு (க்ரைம்), திருச்சானூர் ஆகிய காவல் நிலையங்களில் கணி னிகள் முற்றிலுமாக முடங்கி உள் ளன. விரைவில் இந்தப் பிரச்சினை சரிசெய்யப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in