அரசியலுக்கு வர ரஜினியிடம் என்னதான் இருக்கிறது?- மார்கண்டேய கட்ஜு தாக்கு

அரசியலுக்கு வர ரஜினியிடம் என்னதான் இருக்கிறது?- மார்கண்டேய கட்ஜு தாக்கு
Updated on
1 min read

"ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும், தமிழக முதல்வராக வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர். அவரிடம் அப்படி என்னதான் இருக்கிறது?" என வினவியிருக்கிறார் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு.

வறுமை, வேலையில்லா திண்டாட்டம், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, மருத்துவ வசதிகள் இன்மை, விவசாயிகள் பிரச்சினை இவற்றில் எதற்காவது ரஜினிகாந்திடம் தீர்வு இருக்கிறதா? என்னைப் பொருத்தவரை இதில் எந்தப் பிரச்சினைக்கும் அவரிடம் தீர்வு இருப்பதாகத் தெரியவில்லை. அப்புறம் ஏன் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.

ரஜினி அரசியலில் நுழைவாரா மாட்டாரா என்ற வாத விவாதங்கள் வலுத்துக் கொண்டிருக்கும் நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்களை ஏமாற்றமாட்டார் என்று அவரது நண்பர் ராஜ் பகதூர் கூறியிருந்த செய்தி 'தி இந்து' ஆங்கில நாளிதழில் வெளியாகியிருந்தது.

இந்தச் செய்தியைக் குறிப்பிட்ட கட்ஜூ தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "தென் இந்திய மக்கள் மீது நான் உயர்ந்த மதிப்பீடு கொண்டுள்ளேன். ஆனால் அவர்களின் சினிமா நட்சத்திரங்களை போற்றி வணங்கும் முட்டாள்தனத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் 1967-68 காலகட்டத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது எனது தமிழ் நண்பர்களுடன் சிவாஜி படம் பார்க்கச் சென்றிருந்தேன். முதல் காட்சியில் சிவாஜியின் கால்களை காட்டியபோது ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

இப்போது ரஜினிகாந்த்தை அதே ஆரவாரத்துடன் பார்க்கின்றனர். சிலர் அவர் அரசியலுக்கு வர வேண்டும், தமிழக முதல்வராக வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர்.

ஆனால் ரஜினியிடம் அப்படி என்னதான் இருக்கிறது. வறுமை, வேலையில்லா திண்டாட்டம், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, மருத்துவ வசதிகள் இன்மை, விவசாயிகள் பிரச்சினை இவற்றில் எதற்காவது ரஜினிகாந்திடம் தீர்வு இருக்கிறதா? என்னைப் பொருத்தவரை இதில் எந்தப் பிரச்சினைக்கும் அவரிடம் தீர்வு இருப்பதாகத் தெரியவில்லை. அப்புறம் ஏன் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ரஜினி சிந்தனை திறனற்றவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது முகநூல் பதிவு:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in