Published : 02 Feb 2023 08:35 PM
Last Updated : 02 Feb 2023 08:35 PM

2019-ல் இருந்து பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் 21, செலவு ரூ.22.76 கோடி: அரசு தகவல்

பிரதமர் மோடி | கோப்புப் படம்.

புதுடெல்லி: கடந்த 2019-ல் இருந்து இதுவரை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் 21. அதற்கான செலவு ரூ.22.76 கோடி என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளிதரன் அளித்த எழுத்துபூர்வ பதிலில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. அதன் விவரம்: 2019-ல் இருந்து பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் 21. அதற்கான செலவு ரூ.22.76 கோடி (ரூ.22,76,76,934). குடியரசுத் தலைவர் மேற்கொண்ட பயணங்கள் 8. அதற்கான செலவு ரூ.6.24 கோடி (ரூ.6,24,31,424).

கடந்த 2019-ல் இருந்து பிரதமர் மோடி ஜப்பானுக்கு மூன்று முறை, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு தலா இருமுறை பயணம் செய்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுபோல், குடியரசுத் தலைவரின் 8 பயணங்களைப் பொறுத்தவரை 7 பயணங்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் மேற்கொள்ளப்பட்டவையாகும். தற்போதைய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த செப்டம்பரில் பிரிட்டன் சென்றார்.

2019-ல் இருந்து இதுவரை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 86 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதற்கான செலவு ரூ.20,87,01,475 கோடி என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x