புதிய வரிமுறைக்கு கட்டாயப்படுத்த மாட்டோம் - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

டெல்லியில் நேற்று செய்தியாளர்களை  சந்தித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
Updated on
1 min read

புதுடெல்லி: பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம். அந்த இலக்கை நோக்கி முன்னேறி வருகிறோம். இதை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விதிப்பு நடைமுறையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பழைய வரி விதிப்பில் இருந்து புதிய வரிவிதிப்பு நடைமுறைக்கு மாற யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம். புதிய வரி விதிப்பு நடைமுறையில் ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, அது நிச்சயமாக மக்களை கவரும்.

தொழில் துறையில் முதலீட்டை ஈர்ப்பது மற்றும் குறு, சிறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 4-வது தொழில் புரட்சிக்கு ஏதுவாக இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி அளிக்கபல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெண்கள் முன்னேற்றம், சுற்றுலாதுறை மேம்பாடு, பி.எம்.விகாஸ் திட்டம்,பசுமை வளர்ச்சி ஆகிய துறைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சந்தையில் கூடுதலாக கோதுமை விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம். இதனால், விரைவில் கோதுமை விலை குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளது. தேசிய பணிமனை பயிற்சி திட்டம் தொடங்கப்படும். இதன்மூலம் 47 லட்சம் இளைஞர்களுக்கு 3 ஆண்டுகாலம் உதவித் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். இந்திய டிஜிட்டல் திறன் திட்டம் புதிதாக தொடங்கப்படும். இதன்படி பல்வேறு மாநிலங்களில் 30 திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in