வேலையின்மை பற்றி குறிப்பிடவில்லை - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

வேலையின்மை பற்றி குறிப்பிடவில்லை - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

Published on

பட்ஜெட் குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது: பட்ஜெட்டில் ஏழ்மை, வேலையின்மை, சமத்துவமின்மை பற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிடவில்லை. வேலையின்மை பற்றி ஒரு முறை கூட அவர் குறிப்பிடவில்லை. பரிதாபப்பட்டு, ஏழை என்ற வார்த்தையை அவர் தனது உரையில் இரு முறை கூறினார். அரசு யாரை பற்றி கவலைப்படுகிறது, யாரை பற்றி கவலைப்படவில்லை என்பதை மக்கள் நிச்சயம் அறிவர்.

இந்த பட்ஜெட்டால் ஏழைகள், இளைஞர்கள், வரிசெலுத்துவோர், இல்லத்தரசிகள் பயனடையவில்லை. புதி வரிமுறையை புகுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதை சிலர் மட்டுமே பல காரணங்களுக்காக தேர்வு செய்கின்றனர். புதிய வரி முறை சாதாரண வரி செலுத்துவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பழைய வரி முறைதான் பலன் அளிக்கும்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in