மோசமான வானிலை காரணமாக போர் விமானத்தை தேடும் பணி பாதிப்பு

மோசமான வானிலை காரணமாக போர் விமானத்தை தேடும் பணி பாதிப்பு
Updated on
1 min read

மோசமான வானிலை காரணமாக மாயமான ‘சுகோய்- 30’ போர் விமானத்தைத் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

அசாம் மாநிலம் தேஷ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து நேற்று முன்தினம் 2 விமானப் படை வீரர்களுடன் ‘சுகோய்- 30’ போர் விமானம் புறப்பட்டது. வழக்கமான பயிற்சிக்காகச் சென்ற இந்த விமானம், தேஷ்பூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் பயணித்த போது, ரேடார் சிக்னலில் இருந்து திடீரென துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து, விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட அசாம் மாநிலத்தின் கோக்பூர் பகுதியிலும், அருகில் உள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்தி லும் தேடுதல் வேட்டை நடை பெற்று வருகிறது. விமானம் நொறுங்கி விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஹெலிகாப்டர், சிறிய ரக விமானம் மூலம் அப்பகுதியில் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விமானம் மாய மான பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.

அருணாசல பிரதேசத்தில் சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதி யைக் கண்காணிப்பதற்காக தேஷ்பூர் விமான தளத்தில் 36 விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in