Published : 26 May 2017 08:08 AM
Last Updated : 26 May 2017 08:08 AM

மகாராஷ்டிர மாநிலத்தில் தாவூத் உறவினர் திருமணத்தில் பாஜக அமைச்சர் பங்கேற்றதால் சர்ச்சை

மும்பை குண்டுவெடிப்பில் தேடப் பட்டு வரும் முக்கியக் குற்றவாளி யான தாவூத் இப்ராஹிம்-ன் உறவின ரின் திருமணத்தில் பாஜக-வைச் சேர்ந்த அமைச்சர், எம்எல்ஏக்கள் உட்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கடந்த 19-ம் தேதி நிழல் உலக தாதாவான இந்தியாவால் தேடப் பட்டு வரும் முக்கியக் குற்றவாளி யான தாவூத் இப்ராஹிம்-ன் சகோதரி மகளின் திருமணம் நடைபெற்றது.

இதில் அம்மாநிலத்தைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர் (பாஜக) கிரிஷ் மகாஜன் மற்றும் எம்எல்ஏக்கள் தேவ்யானி பராந்தி, பாலாஷாகிப் ஷனாப், ஷீமா ஹிராய் மற்றும் நாசிக் மேயர் ரஞ்சனா பானாசி, துணை மேயர் பிரதாமேஷ் கீதே (இருவரும் பாஜக-வைச் சேர்ந்தவர்கள்) மற்றும் உதவி காவல் ஆணையர், 9 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இது பத்திரிகைகளில் செய்தி யாக வெளியானதை அடுத்து, விழா வில் கலந்துகொண்ட அமைச்சர், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் கிரிஷ் மகாஜன் கூறும்போது:

நாங்கள் திருமணத்தில் கலந்து கொண்டது உண்மைதான். நாசிக் கைச் சேர்ந்த முஸ்லிம் தலைவரான சாகர் ஏ காதிப் அவரது மகன் திரு மண விழாவுக்காகத் தன்னை அழைத்தார். அவர் சமூக செயற்பாட் டாளராகவும், இப்பகுதியில் சமூக அமைதிக்காகப் பாடுபடுபவராக வும் இருப்பதால் அந்த விழாவில் கலந்து கொண்டேன்.

ஆனால் மணமகள் தாவூத் இப்ராஹிம்-ன் உறவினர் என்பது அதன்பின்னரே தெரியவந்தது. நாசிக்கைச் சேர்ந்த அமைச்சர் என்பதால் தனக்கு அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் அழைப்பிதழ் கொடுப்பார்கள். ஒவ்வொன்றையும் தன்னால் ஆராய்ந்து பார்த்து விழாவில் பங்கேற்கச் செல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டது தொடர்பாக காவல் ஆணையர் ரவீந்திர சிங்கால் விசாரணைக்கு உத்தர விட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “மணமகளின் குடும் பத்தார் மீது எந்த வழக்கும் இல்லை. அதேநேரம், திருமண விழாவில் பங்கேற்ற போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x