

ஹரியாணா மாநில முதல்வராக கடந்த 2014-ம் ஆண்டு வரை இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபிந்தர் சிங் ஹூடா.
இவர், அம்மாநில நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார். அப்போது, தொழில் பேட்டைகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக சிபிஐ-யால் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில், 14 பேருக்கு முறைகேடாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக, ஹுடா மற்றும் அவரது முதன்மைச் செயலாளராக இருந்த ஷட்டார் சிங், நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் 2 பேர் என நான்கு பேர் சேர்க்கப்பட்டனர். இதில், ஹூடா தவிர மற்ற 3 பேரிடம் சிபிஐ ஏற்கெனவே விசாரணை நடத்திவிட்டது.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவிடம் சிபிஐ நேற்று முதல்முறையாக விசாரணை நடத்தியது.