Published : 31 Jan 2023 08:09 AM
Last Updated : 31 Jan 2023 08:09 AM

விசாரணை நீதிமன்றங்களால் 2022-ல் 165 பேருக்கு மரண தண்டனை - கடந்த 20 ஆண்டுகளில் அதிகபட்சம்

புதுடெல்லி: டெல்லியிலுள்ள தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் பிராஜக்ட் 39ஏஎன்ற பெயரில் `இந்தியாவில் மரணதண்டனை: ஆண்டு புள்ளிவிவரங் கள் 2022’ என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2021-ம் ஆண்டு 146 பேருக்கு மரண தடண்டனை வழங்கப்பட்டது. 2022-ல் 165 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2022-ல்அகமதாபாத் நீதிமன்றத்தில் மட்டும் 38 பேருக்கு மரண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2016-ல் 163 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

இதுகுறித்து சட்டப் பேராசிரி யரும், பிராஜக்ட் 39ஏ திட்டத்தின் செயல் இயக்குநருமான அனுப் சுரேந்திரநாத் கூறியதாவது:

2020-ல் கரோனா பெருந்தொற்று பாதிக்கப்பட்டபோது அந்த ஆண்டில் 77 பேருக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த20 ஆண்டுகளில் இதுவே குறைந்தபட்ச அளவில் வழங்கப்பட்ட மரண தண்டனையாகும். 2022-ல் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 165 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை 2016-ல் 400-ஆக இருந்தது. 2022 டிசம்பரில் இது 539-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக உ.பி. சிறை களில் 100 மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர். குஜராத்தில் 61 பேரும், ஜார்க்கண்டில் 46 பேரும்உள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்டு உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீட்டு மனு வரும்போது அவர்களின் மரண தண்டனை குறைக்கப்படுகிறது. சில வழக்குகளில் அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x