திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாகியாக வட இந்தியரை நியமிப்பதா?

திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாகியாக வட இந்தியரை நியமிப்பதா?
Updated on
1 min read

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழு மலையான் கோயிலை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இதன் தலைமை நிர்வாகியாக இதுவரை தென்னிந்தியாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளே நியமிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் முதல்முறையாக வட இந்தியாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதி காரி அணில்குமார் சிங்கால் அப்பத விக்கு நியமிக்கப்பட்டார். அண்மையில் அவரும் திருமலைக்கு வந்து பொறுப் பேற்றுக் கொண்டார். அப்போது விதி களை மீறி, செல்போனுடன் கோயிலுக்குச் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யிருந்தது.

இந்நிலையில் வட இந்தியரான அணில்குமார் சிங்காலை தலைமை நிர்வாகியாக நியமித்ததற்கு நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘‘காசி, அமர்நாத், மதுரா போன்ற பிரசித்தி பெற்ற வட இந்திய கோயில்களில், தென்னிந்திய அதிகாரிகள் நியமிக் கப்படுவதில்லை. அவ்வாறு இருக்கும்போது தென்னிந்திய கோயிலான திருப்பதிக்கு மட்டும் வட இந்திய ஐஏஎஸ் அதிகாரியை தலைமை நிர்வாகியாக எப்படி நியமிக்கலாம். இதற்கு ஆந்திர அரசு பதில் அளிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in