

பீஹார் மாநிலம் பாட்னாவில் மருத்துவப் படிப்புக்கான “நீட்” தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் தேர்வு பயிற்சி மைய இயக்குநரைப் போலீஸார் கைது செய்தனர்.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு (நீட்) கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில், பீஹார் மாநிலம் பாட்னா-வில் தேர்வுக்கு முன்னதாக, வினாத்தாள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஷேக்புரா மாவட் டத்தில் உள்ள தேர்வு பயிற்சி மைய இயக்குநர் சந்திரன் குமார் என்ற லாலு-வைப் போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய் தனர். மேலும், பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராள மான ஆவணங்கள், கம்யூட்டர் “ஹார்டு டிஸ்க்” உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
முன்னதாக, வினாத்தாளை முன்கூட்டியே வெளியிட முயன்ற சம்பவம் தொடர்பாக 2 மருத்துவ மாணவர்கள் உட்பட 5 பேரைப் போலீஸார் ஏற்கெனவே கைது செய் துள்ளனர். அவர்களிடம் இருந்து மொபைல் போன், மின்னணு சாத னங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.