

விஜயவாடா: ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பயணித்த சிறப்பு விமானம் அவசர அவசரமாக கன்னவரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அவர் பயணித்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுதான் இதற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் புறப்பட்ட நிலையில், அதில் கோளாறு இருப்பது அறிந்து தரையிறக்கப்பட்டது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. விஜயவாடா பகுதியில் இது நடந்துள்ளது.
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ல் இவர் தலைமையிலான அரசு ஆந்திராவில் ஆட்சி அமைத்தது. ஆந்திர மாநிலத்தின் 17-வது முதல்வர் இவர். மக்களவை உறுப்பினர் மற்றும் ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவராகவும் இவர் செயலாற்றியுள்ளார்.