Published : 30 Jan 2023 06:26 AM
Last Updated : 30 Jan 2023 06:26 AM
புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அங்குள்ள சுற்றுலாத் தலங்களின் படங்களை பேஸ்புக்கில், மாநில முதல்வர் பீமகந்துவெளியிட்டிருந்தார்.
‘‘திபாங் மாவட்டத்தின் அனினி பகுதியில்பனிப் பொழிவு ஆரம்பித்துள்ள தால், அப்பகுதி முழுவதும் பனிபடர்ந்து காணப்படுகிறது. பனிமூட்டம், குளிர்காற்றும் வீசுகிறது. இங்குள்ள அழகான சிகு ரிசார்ட்ஸை பார்க்க வாருங்குள்’’ என அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் நாகாலாந்து உயர்கல்வித்துறை மற்றும் பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர்தெம்ஜேன் இம்னா, அனினி பகுதியில் உள்ள சிகு ரிசார்ட்ஸ் படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அவர் ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘இது சுவிட்சர்லாந்தோ அல்லது காஷ்மீரோ அல்ல. அருணாச்சலப் பிரேதசத்தின் அனினி பகுதியில் புதிதாக உவாக்கப்பட்டுள்ள சிகு ரிசார்ட். மிகவும்அருமையான இடம் இல்லையா? அருணாச்சல முதல்வர் பீமகந்துஅவர்களே, என்னை எப்போதுஅருணாச்சல் அழைக்கப்போகி றீர்கள்? என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள அருணாச்சல முதல்வர் பீமகந்து, ‘‘சூரியன் உதிக்கும் அழகான நிலப்பகுதிக்கு நீங்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறீர்கள்’’ என பதில் அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT