

கேரளாவில் கடந்த 4 மாதங்களில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு 40 பேர் உயிரிழந்துள்ளதாக, அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே சைலஜா தெரிவித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் எம்எல்ஏ வி.எஸ் சிவக்குமார், “மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்சினையைத் கையாளுவதில் அரசு தோல்வியடைந்து விட்டதாக வும், இதுபற்றி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கோரி, பேரவைத் தலைவர் ராமகிருஷ்ணனிடம் நோட்டீஸ் கொடுத்திருந்தார்.
பேரவைக் கூட்டத்தில் பேசிய சிவக்குமார், கடந்த 4 மாதங் களில் மட்டும் சுமார் 2,000 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக் கப்பட்டுள்ளனர். கடந்த 20 நாட் களில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதாரத்துறை ஊசலாடி வருகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் கள்கூட நோயால் பாதிக்கப் படுவதாக, கடுமையான குற்றச் சாட்டுகளை முன்வைத்தார்.
எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதாலாவும், அரசு இந்த விஷயத்தில் தோற்றுவிட்ட தாகக் கூறினார். இதற்குப் பதிலளித்து, சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே சைலஜா கூறியதாவது:
நடப்பாண்டு கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கணக்கெடுக் கப்பட்டதில் மாநிலம் முழுவதும் 2,349 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருந்தது. இவர்களில் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 500 பேரில், 40 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் பலருக்கு பன்றிக்காய்ச்சல் தவிர உடலில் மற்ற நோய் தொற்றும் இருந் துள்ளது. அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. போதுமான மருந்து கள் அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் இருப்பு வைக் கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதன்பின்னர், இந்த விவ காரத்தில் முழுமையான விவாதத் துக்கு பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை என்று கூறி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.