Published : 29 Jan 2023 07:25 AM
Last Updated : 29 Jan 2023 07:25 AM

ஜார்க்கண்ட் மருத்துவமனையில் தீ விபத்து - டாக்டர் தம்பதி உட்பட 6 பேர் உயிரிழப்பு

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் தீ விபத்து ஏற்பட்ட ஹஸ்ரா மருத்துவமனை.

தன்பாத்: ஜார்க்கண்ட் மாநில மருத்துவ மனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவ தம்பதி உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தின் புரானா பஜார் பகுதியில் உள்ளது ஹஸ்ரா மருத்துவமனை. இதன் 2-வது மாடியில் மின் கசிவு காரணமாக நேற்று முன்தினம் இரவு தீப்பற்றியது. தீ முதல் மாடிக்கும் பரவியது. அங்கு தீயை அணைக்கும் வசதிஇல்லாததால், முதல் தளம் முழுவதும் புகை சூழ்ந்தது. இதனால், அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களால், தப்பி வெளியேற முடியவில்லை. புகை மண்டலத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு டாக்டர் விகாஸ் ஹஸ்ரா, அவரது மனைவி டாக்டர் பிரேமா ஹஸ்ரா மற்றும் மருத்துவமனையின் இதரஊழியர்கள் என 6 பேர் உயிரிழந்தனர்.

மருத்துவமனையில் தீவிபத்து சம்பவத்தை கேள்விபட்டதும், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அங்கு மீட்பு பணியும் உடனடியாக தொடங்கியது. மருத்துவமனை கட்டிடத்துக்குள் இருந்து 9 பேரை, தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர். அவர்கள் அருகில் உள்ள பாடலிபுத்ரா மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காரணம் என்ன?

தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையை தீயணைப்பு படையினர்ஆய்வு செய்தனர். மருத்துவமனையில் தீயை அணைக்கும் கருவிகள் மற்றும் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால்அவை செயல்பாட்டில் இல்லைஎன்பதை தீயணைப்பு படையினர்கண்டுபிடித்தனர். மருத்துவ மனையின் பாதுகாப்பு குறைபாடுகளே, மிகப் பெரியளவிலான தீ விபத்துக்கும், 6 பேரின் உயிரிழப்புக்கும் காரணம் என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x