கர்நாடகாவில் தமிழர்கள் வேலையிழக்கும் அபாயம்: தனியார் துறைகளில் கன்னடர்களுக்கு 70% இடஒதுக்கீடு வழங்க முடிவு

கர்நாடகாவில் தமிழர்கள் வேலையிழக்கும் அபாயம்: தனியார் துறைகளில் கன்னடர்களுக்கு 70% இடஒதுக்கீடு வழங்க முடிவு
Updated on
1 min read

கர்நாடகாவில் தனியார் துறை வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு 70 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இயற்றப்பட்டுள்ளதாக அம்மாநில தொழில் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு வாழ்ந்துவரும் தமிழர், தெலுங்கர் உள்ளிட்ட பிறமொழியினர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

‘அரசு பணிகளில் கன்னடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதைப் போல, தனியார் துறையிலும் கன்னடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கர்நாடகாவில் உள்ள‌ மத்திய அரசு பணிகளிலும் கன்னடர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்கான புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என கன்னட அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதை ஏற்று, மாநில தொழில்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தனியார் துறையில் 2-ம் நிலை பணியாளர்களை நியமிப்பதில் கன்னடர்களுக்கு 100 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியானது.

இது தொடர்பாக கர்நாடகத் தொழி லாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பில் கன்னடர் களுக்கு 70 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்ட திருத்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறையால் தயாரிக் கப்பட்ட இந்த‌ மசோதா தற்போது சட்டத்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின்படி தொழில் நிறுவனங்களில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வேலைவாய்ப்பில் 50 சதவீதமும், ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவுகளில் 20 சதவீத மும் கட்டாய இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறு வனங்களில் இந்த இடஒதுக்கீட்டை கொண்டுவருவது சாத்தியமில்லை.

கன்னடர்களுக்கு 70 சதவீத இடஒதுக்கீடு வழங்காத நிறுவனங் களுக்கு அரசின் வரி விலக்கு, இலவச நிலம், நீர், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட மாட்டாது. சட்டத் திருத்தத்தின் சாதக, பாதகங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழர்களுக்கு பாதிப்பு?

கர்நாடகா மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் கன்னடம் அல்லாத பிறமொழியினர் உள்ளனர். அதிலும் தலைநகரான பெங்களூரு வில் வசிப்பவர்களில் பிறமொழியி னரே அதிகம். குறிப்பாக தமிழர்கள் 50 சதவீதம் பேர் பெங்களூருவில் வசிக்கின்றனர். இவர்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பல்வேறு பணிகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். ஒட்டு மொத்த தமிழர்கள் மட்டுமின்றி, தெலுங்கு உள்பட பிறமொழி பேசும் மாநிலத்தவரும் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in