Published : 28 Jan 2023 02:49 PM
Last Updated : 28 Jan 2023 02:49 PM

குஜராத் கலவரத்தை பற்றி விவாதிப்பதால் மதச்சார்பற்ற சக்திகள் சிறிது பயனடையலாம் - சசி தரூர்

சசி தரூர் | கோப்புப்படம்

புதுடெல்லி: கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தினால் ஏற்பட்ட காயங்கள் இன்னும் முழுமையாக ஆறிவிடவில்லை. இதைப்பற்றி விவாதிப்பதால் மதச்சார்பற்ற சக்திகள் சிறிது பலனடையலாம் என்று திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தெரிவித்துள்ளார். தன்னைக் குறித்து பயனர் ஒருவர் ட்விட்டரில் தெரிவித்திருக்கும் கருத்துக்கு சசி தரூர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

பிதரமர் மோடி குறித்து பிபிசி யின் ஆவணப்படம் சமீப நாட்களாக இந்தியாவில் பேசுபொருளாகி உள்ளது. இந்த ஆவணப்படம் ஒரு பிரச்சாரப் படம், காலணியதிக்க மனோநிலை எனத் தெரிவித்திருக்கும் மத்திய அரசு ஆவணப்படத்தை திரையிட தடைவித்துள்ளது. ஆனாலும் இடதுசாரி அமைப்புகளும், சில மாணவர் அமைப்புகளும் அந்த ஆவணப்படத்தை திரையிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ள நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து மாறியிருக்கிறார். தான் தெரிவித்த கருத்து குறித்து சமூக வலைதளத்தில் ஒருவர் வெளியிட்டிருக்கும் பதிவிற்கு கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து மாறி அவர் பதிலளித்துள்ளார்.

முன்னதாக, ட்விட்டர் பயனர் ஒருவர் தனது பதிவில், "கடந்த 1919ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக பிரிட்டிஷ் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சசி தரூர் கோரியிருந்தார்

தற்போது, 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தை இந்தியர்கள் கடந்த செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நாடும், மக்களும் நீண்ட காலம் நினைவுகளைக் கொண்டிருப்பவர்கள் என்று அவர் தனது சொந்த அனுவபத்தில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்

இந்த பதிவினை டேக் செய்து சசி தரூர் பதில் அளித்துள்ளார். அதில், "நான் அப்படிச் சொல்லவில்லை. குஜராத் கலவரத்தின் காயங்கள் இன்னும் முழுமையாக ஆறிவிடவில்லை என்று நீண்ட காலமாக நான் பேசி வருகிறேன். இந்த விவாகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. நமக்கு உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய சமகால பிரச்சினைகளுக்கு மத்தியில் அதனை நாம் விவாதிப்பதில் இருந்து சிறிது லாபம் மட்டுமே அடைய முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்," என்னுடைய கருத்தில் பலருக்கு உடன்பாடு இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். வகுப்புவாத கலவரங்களுக்கு எதிரான எனது 40 ஆண்டுகால பதிவுகள், 20 ஆண்டுகளாக குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நின்றை சிதைப்பது மிகவும் இழிவானது. இதனை விவாதிப்பதன் மூலம் மதச்சார்பற்ற அணியினர் சிறிது பயனடைகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பாஜகவிற்கு எதிரான நிலைப்பாடுடைய பல மாணவர் அமைப்புகள் பிபிசி ஆவணப்படத்தை தங்களின் பல்கலைகழக வளாகங்களில் திரையிடுவதற்கு பெரும் முயற்சி எடுத்துவருகின்றன. ஆனால் படத்தை திரையிடுவதற்கு அரசு தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x