

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துமனைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார்.
2014-15 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், "படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்தப்படும். ஏற்கெனவே புதிதாக அமைக்கப்பட்ட 6 எய்மஸ் மருத்துவமனைகளும் செயல்படத் துவங்கியுள்ளன. மேலும் 4 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்படும்.
கிராமப்புறங்களில் சுகாதார சேவையை மேம்படுத்த, நவீனமயமாக்கப்பட்ட 15 மாதிரி கிராம சுகாதார மையங்கள் நிறுவப்படும். கிராமப்புற குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.