குஜராத் கலவரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேர் விடுவிப்பு

குஜராத் கலவரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேர் விடுவிப்பு
Updated on
1 min read

கோத்ரா: குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு பெரும் கலவரம் வெடித்தது. பஞ்ச்மஹால் மாவட்டத்தில் திலோல் கிராமத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 2 ஆண்டுகள் கழித்து முகேஷ் பர்வாத், கில்லோல் ஜானி, அசோக்பாய் படேல், நிரவ்குமார் படேல் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த 18 ஆண்டுகளாக இந்த வழக்கு பஞ்ச்மஹால் மாவட்ட ஹலோல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவர்கள் 22 பேரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இவர்களில் 8 பேர் விசாரணைக் காலத்தில் உயிரிழந்துவிட்டனர்.

இதுகுறித்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் கோபல் சிங் சோலங்கி கூறுகையில், “குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. உயிரிழந்தவர்களின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட வில்லை. இதனால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரை நீதிபதி விடுவித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in