பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்று தேவையில்லை

பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்று தேவையில்லை
Updated on
1 min read

பாஸ்போர்ட் பெறுவது தொடர் பான சில கட்டுப்பாடுகளை வெளியுறவு அமைச்சகம் தளர்த்தி யுள்ளது.

1989 ஜனவரி 26-ம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் பெற பிறப்புச் சான்றிதழ் கட்டாய மில்லை. அதற்குப் பதிலாக பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழ், பான் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, எல்ஐசி பாலிசி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அளிக்கலாம்.

திருமணமானவர்கள் தங்களது திருமண சான்றிதழை விண்ணப் பத்தின்போது அளிக்க தேவை யில்லை. சாதுக்கள் தங்கள் பெற் றோரின் பெயருக்கு பதிலாக குருவின் பெயரை விண்ணப்பத்தில் குறிப்பிடலாம்.

அடையாள அட்டை, தடையில்லா சான்றிதழ் பெற முடியாத அரசு ஊழியர்கள், தங்கள் அலுவலக பரிந்துரை கடிதத்துடன் சுய சான்றை இணைத்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in