

நொய்டா, மும்பை விமான நிலையத்தில் 111 கிலோ தங்கம், வெள்ளி மற்றும் 12 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறுப்புப் பணத்தை கண்டு பிடிக்கும் நடவடிக்கையாக வரு வாய் துறை உளவு இயக்கு நரகத்தின் லக்னோ மண்டல அதிகாரிகள், நொய்டாவைச் சேர்ந்த சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது ரூ.12 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளுடன் மொத்தம் ரூ.2.60 கோடி ரொக்கம், 95 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிறுவனம் இணைய பரிவர்த் தனை மூலமும் கணிசமான தொகையை தனக்கு சொந்தமான மற்றொரு நிறுவனத்துக்கு மாற்றி இருப்பதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகி றது. அதே சமயம் நிறுவன இயக் குநர்கள் விசாரணைக்கு பயந்து மருத்துவமனையில் சேர்ந்திருப் பதாகவும் தெரியவந்துள்ளது.
போலி நோட்டுகளள்
இதற்கிடையே, உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் புதிய 2,000 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்த கும்பலைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்த னர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள புதிய 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப் பட்ட இரண்டு பேரில் முகமது குஷி என்பவர் உள்ளூர் அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் என்பது தெரிய வந்துள்ளது.
இதேபோல டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு நேற்றுமுன்தினம் இரவு 2 பேர் வந்தனர். அவர்கள் மீது மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினருக்கு சந்தேகம் ஏற்பட் டது. இருவருடைய உடைமைகளை யும் சோதனையிட்ட போது, இருவரி டம் சேர்த்து 15.85 கிலோ தங்கமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வருமான வரித் துறை அதிகாரிகளிடம் இருவரையும் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்களுடைய பெயர் என்.ஜாதவ் மற்றும் பி.ஜாதவ் என்று தெரிய வந்தது. அதன்பின், மும்பையில் உள்ள வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, இருவரும் விமானத்தில் செல்ல அனுமதிக்கப் பட்டனர்.
டெல்லியில் இருந்து விமானம் மும்பை வந்தடைந்தவுடன், இரு வரையும் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். இருவரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.