மூத்த தமிழ் நாடக ஆசிரியர் அந்துராஜன் காலமானார்: கோலார் தங்கவயலில் உடல் அடக்கம்
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்திலுள்ள தங்கவயலை சேர்ந்த அந்துராஜன்(77), சாக்கிய பவுத்த சங்கப் பள்ளியில் படித்தவர். சிறுவயதிலேயே நடிப்பு, இசை, ஓவியம் என பல துறைகளில் சிறந்து விளங்கினார். தங்க சுரங்கத்தில் பணியாற்றிய அந்துராஜன், தொழிற்சங்க நாட கங்களில் நடிக்கத் தொடங்கினார்.
1961-ம் ஆண்டு அந்துராஜன் தனியாக நவரச நாடக மன்றத்தை உருவாக்கி கோலார் தங்கவயலின் அனைத்து பகுதிகளிலும் நாடகங் களை அரங்கேற்றம் செய்துள் ளார். இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அந்து ராஜன் நேற்று முன் தினம் இரவு காலமானார். மாரிக்குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு உறவினர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
தங்கவயல் தமிழ் சங்கத் தலைவர் கலையரசன், இலுஷன் புத்தக நிலைய உரி மையாளர் சந்திரசேகரன், நாடக மன்றங்களை சேர்ந்த ஏராளமானவர்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அந்துராஜனின் உடல் சாம்பியன் ரீஃப் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
