பிரபல கட்டடக் கலை நிபுணர் பி.வி.தோஷி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

மறைந்த கட்டடக்கலை நிபுணர் பி.வி.தோஷி
மறைந்த கட்டடக்கலை நிபுணர் பி.வி.தோஷி
Updated on
1 min read

புது டெல்லி: பிரபல கட்டடக் கலை நிபுணர் டாக்டர் பி.வி.தோஷி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'டாக்டர் பி.வி.தோஷி மிகச் சிறந்த கட்டடக்கலை நிபுணராகவும், பல்வேறு நிறுவனங்களை நிர்மாணித்தவராகவும் திகழ்ந்தவர்.

இந்தியா முழுவதும் அவர் மேற்கொண்ட நுட்பமான சிறந்த பணிகள் மூலம் வருங்கால தலைமுறையினர் கட்டடக்கலை நுட்பத்தை அறிந்து கொள்வார்கள்.

அவருடைய மறைவு கவலை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல். ஓம் சாந்தி” என தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in