12.5 லட்சம் மருந்தாளுநருக்கு தடுப்பூசி போடும் பயிற்சி

12.5 லட்சம் மருந்தாளுநருக்கு தடுப்பூசி போடும் பயிற்சி
Updated on
1 min read

நாக்பூர்: இந்தியாவில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் சிகிச்சை பெற முடியாமல் பலர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, கிராமப்புறங்களில் இவர்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு இந்திய மருந்து கழகம் (ஐபிஏ) மருந்தாளுநர்களுக்கு தடுப்பூசி போடும் பயிற்சி திட்டத்தை தொடங்க உள்ளது. வரும் மே மாதம் முதல் மருந்தாளுநர்களுக்கான தடுப்பூசி பயிற்சி திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் தடுப்பூசி போடுபவர்களின் பங்களிப்பை 12.5 லட்சமாக அதிகரிக்க ஐபிஏ இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதன் மூலம், கரோனா போன்ற உலகளாவிய தொற்று நோய் நெருக்கடிகளின் போது குறைந்தபட்சம் 25 சதவீத உயிர்களை காப்பாற்ற முடியும் என இந்திய மருந்து கழகம் தெரிவித்துள்ளது.

2023 மே மாதம் தொடங்கும் பயிற்சியில் பங்கேற்கும் மருந்தாளுநர்களுக்கு 15 நாட்களுக்கு ஆன்லைன் பயிற்சியும், அதனைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் 15 நாட்கள்நேரடி பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் பங்கேற்றுதேர்ச்சி பெறும் மருந்தாளுநர்களுக்கு ஐபிஐ மற்றும் உலக சுகாதார அமைப்பு சான்றிதழ் வழங்கப்படும்.

இதுகுறித்து ஐபிஏ தலைவர் டிவி நாராயணா கூறுகையில், “மருந்தாளுநர்களுக்கு தடுப்பூசிபயிற்சிகள் வழங்க அரசு ஏற்கெனவே ஒப்புதல் தெரிவித்துள் ளது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் இந்த நடைமுறை ஏற்கெனவே அமலில் உள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in