ட்ரோன் கேமரா இயக்க விரைவில் தடை - திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்

ட்ரோன் கேமரா இயக்க விரைவில் தடை - திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்
Updated on
1 min read

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தடை செய்யப்பட்ட இடங்களில் ட்ரோன் கேமராவை உபயோகித்து சமீபத்தில் வீடியோ படம் எடுக்கப்பட்டது. இது கோயில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என பலர் குற்றம் சாட்டினர். இந்தநிலையில் நேற்று திருமலையில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

பாதுகாப்பு கருதி திருமலையில் இனி ட்ரோன் கேமராக்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட உள்ளது. இது குறித்து விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும். பக்தர்களின் உடமைகளை பாதுகாப்பாக திருப்பதியில் இருந்து திருமலைக்கு கொண்டு வரவும், பின்னர் அதனை பாதுகாப்பாக மீண்டும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் (பெல்) நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.

தேவஸ்தான வரலாற்றிலேயே முதன்முறையாக அசையும், மற்றும் அசையா சொத்துகள் குறித்து நாங்கள் வெள்ளையறிக்கை மூலம் தெரிவித்துள்ளோம். இதேபோல், 2019-ம் ஆண்டு 7,339 கிலோ தங்கம் பல்வேறு அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்வி, மருத்துவத்திலும் பல ஏழைகளுக்கு உதவி புரிந்து வருகிறது. இவ்வாறு தர்மா ரெட்டி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in