

தெலங்கானாவில் சித்தி பேட்டை தொகுதியில் உள்ள இப்ரஹீம்பேட்டை கிராம மக்கள் கடந்த 20 நாட்களாக ரொக்கமில்லா வர்த்தகத்துக்கு மாறிவிட்டனர். விரைவில் சித்திபேட்டை தொகுதி முழு வதும் பணமில்லா வர்த்த கத்துக்கு மாற உள்ளது.
பண மதிப்பு நீக்க அறிவிப் புக்குப் பிறகு நாட்டு மக்கள் ரொக்கமில்லா பண பரிவர்த் தனைக்கு மாற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். அதற்கேற்ப பணத்தட்டுப்பாடு நிலவியதால் டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் பண பரிவர்த்தனை நாட்டில் அதிகரித்தது,
இதனிடையே ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தர்மசா கரம் கிராம மக்களும் ரூபாய் நோட்டுகளை உபயோகிக் காமல் வர்த்தகம் செய்ய கற்றுக்கொண்டுவிட்டனர். விசாகப்பட்டினம் மாவட்டம், நர்சிபட்டினம் உதவி மாவட்ட ஆட்சியராக உள்ள சாய்காந்த் வர்மா இந்த மாற்றத்தை உருவாக்கி உள்ளார்.
முதலில் இந்த கிராமத்தைச் சேர்ந்த படித்த 20 இளைஞர் களுக்கு மொபைல்போன் மூலம் வங்கிப் பரிவர்த்தனை, நெட் பேங்கிங், ரூபே அட்டை கள் மற்றும் இதர செயலிகள் மூலம் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை செய்ய கற்றுத் தரப்பட்டது.
பின்னர் இந்த கிராமத்தில் உள்ள 772 குடும்பத்தாருக்கும், குடும்பத்தில் ஒருவர் வீதம் ரொக்கமில்லா பணப் பரி வர்த்தனை கற்று தரப்பட்டது. கடந்த 15-ம் தேதி முதல் இது போன்ற மின்னணு பரிவர்த் தனைகளைக் கிராம மக்கள் சுலபமாக நடத்தி வருகின்றனர்.
இந்த கிராமத்தில் உள்ள 4 மளிகை கடைகளுக்கும், 6 ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், பால் விற்பனையாளருக்கும் ஸ்வைப் மிஷன் வழங்கப்பட் டுள்ளது. இதன்மூலம் இந்த கிராம மக்கள் தங்களிடமுள்ள டெபிட் கார்டுகள் மூலம் பணமில்லா வர்த்தகத்தைத் தொடருகின்றனர்.