

மகாராஷ்டிர மாநிலம், கோண்டியா நகரில் ஹோட்டல் ஒன்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
கோண்டியா நகரில், கோரி லால் சவுக் என்ற பிரதான இடத்தில் பிண்டால் என்ற ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டல் வளாகத்தில் உள்ள ஒரு கடை யில் நேற்று அதிகாலை 3.30 மணி யளவில் தீவிபத்து ஏற்பட்டது. ஹோட்டல் கட்டிடத்துக்கும் தீ பரவியது. தகவலின் பேரில் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்தனர்.
தீ விபத்து நேரிட்டபோது ஹோட்டலில் சுமார் 15 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீ பரவியதை தொடர்ந்து 2-வது மாடியில் இருந்து குதித்த ஒருவர் படுகாயம் அடைந்தார். இவர் நாக்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஹோட்டல் அறைகளில் இருந்து 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் அடையாளம் காணமுடி யாத வகையில், கருகிய நிலை யில் 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
மீட்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அபுமன்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திலீப் பாட்டீல் புஜ்பால் ஆகியோர் கண்காணித்தனர்.
“தீ விபத்தில் இறந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப் படவில்லை” என போலீஸார் தெரிவித்தனர்.