ஹவாலா மோசடி நபர் பெங்களூருவில் கைது: ரூ.5.70 கோடி புதிய நோட்டுகள் சிக்கின

ஹவாலா மோசடி நபர் பெங்களூருவில் கைது: ரூ.5.70 கோடி புதிய நோட்டுகள் சிக்கின
Updated on
1 min read

ஹவாலா மோசடி செய்ததாக கே.வி. வீரேந்திரா என்பவரை கர்நாடகாவில் அவருக்குச் சொந்தமான இடத்திலிருந்து செவ்வாய்க் கிழமை சிபிஐ கைது செய்தது. அவரிடம் இருந்து ரூ.5.70 கோடி மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து வெளியான தகவல்களின்படி, இந்திய ஸ்டேட் வங்கி, மைசூரு ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோட்டக் மகேந்திரா வங்கி ஆகிய நான்கு வங்கிகளின் அதிகாரிகளுக்கும், இந்த மோசடிக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஆறு நாட்கள் சிபிஐ விசாரணை

கைது செய்யப்பட்ட வீரேந்திரா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் முன்னர், ஆறு நாட்கள் சிபிஐ காவலில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அப்போது அவரிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்ட விசாரணையில் வீரேந்திராவுடன் இணைந்து மோசடியில் ஈடுபட்ட பல்வேறு நபர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீரேந்திராவுடன் அவர்களுக்கு என்ன தொடர்பு என்பது உள்ளிட்ட ஆதாரங்களை சிபிஐ திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மூத்த வங்கி அதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் ஹவாலா மோசடியில் அவர்களின் பங்கு என்ன, ரூ.5.70 கோடி எங்கிருந்து வந்தது உள்ளிட்டவை குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in