

கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி அமல்படுத்திய பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவரது கட்சி சார்பில் நேற்று மீண்டும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து ஐக்கிய ஜனதா தள தலைவர் சுனில் குமார் பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேச நலனுக்காக எடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரிவிக்கிறது. பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் 50 நாட்களைத் தனக்கு வழங்கும்படி கேட்டுள்ளார். எனவே 50 நாள் முடிவதற்குள் நாம் எந்தவொரு முடிவுக்கும் வந்துவிடக் கூடாது. இந்த விவகாரத்தில் ஐக்கிய ஜனதா தளம் பிரதமருக்கு தோள் கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.