

அமெரிக்காவின் கலிபோர்னியா வில் உள்ள லாரன்ஸ் பெர்க்லே தேசிய ஆய்வகம் மற்றும் டெல்லி யில் உள்ள ஐஐடி விஞ்ஞானிகள், கடந்த ஆண்டு உலகளவில் பதிவான வெப்ப நிலை, வெப்ப காற்று பற்றி விரிவான ஆய்வு நடத்தி உள்ளனர்.
அதில், பயங்கர அனல் காற்றில் இந்தியாவில் மட்டும் 2,500 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் 2,000 பேர் பலியாகி உள்ளனர். மனிதர்களின் நடவடிக்கைகளால் பருவநிலையில் ஏற்பட்ட மாற்றங் களே இதற்குக் காரணம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக கார்பன் டை ஆக்ஸைடு அதிகளவு வெளியேற்றியதால் கடும் வெப்ப நிலை இந்த 2 நாடுகளிலும் பதிவாகி உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு மே, ஜூன் மாதங்கள், பாகிஸ் தானில் ஜூன், ஜூலை மாதங்களில் கடும் வெப்பக்காற்று பதிவாகி உள்ளது. இதன் காரணமாகவே இவ்விரு நாடுகளிலும் அனல் காற்றுக்கு அதிகமானோர் பலியாகி உள்ளனர் என்று லாரன்ஸ் பெர்க்லே ஆய்வகத்தைச் சேர்ந்த டெய்த்தி ஸ்டோன் கூறியுள்ளார்.இதே கருத்தை டெல்லி ஐஐடி ஆராய்ச்சி யாளர்களும் தெரிவித்துள்ளனர்.