Published : 31 Dec 2016 10:21 AM
Last Updated : 31 Dec 2016 10:21 AM

50 நாளில் ஷீரடி சாய்பாபா கோயில் உண்டியல் வருவாய் ரூ.31.73 கோடி

பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகும் ஷீரடி சாய்பாபா கோயிலில் கடந்த 50 நாட்களில் மொத்தம் ரூ.31.73 கோடி உண்டியல் காணிக்கையாக சேர்ந்திருப்பதாக ஷீரடி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் ரூ.4.53 கோடிக்கு மதிப்பு நீக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளும், ரூ.3.80 கோடிக்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும் இருந்ததாக சாய்பாபா கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் சச்சின் டாம்பே தெரிவித்துள்ளார்.

கடந்த 50 நாட்களில் மட்டும் கோயில் உண்டியலில் ரூ.18.96 கோடி காணிக்கையாக வந்து சேர்ந்ததாகவும், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் முறையே ரூ.4.25 கோடி, ரூ.2.62 கோடி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர நன்கொடை கவுன்டர்களில் வங்கி வரைவோலை மூலம் ரூ.3.96 கோடியும், ஆன்லைன் மூலம் ரூ.1.46 கோடியும், மணி ஆர்டர் மூலம் ரூ.35 லட்சமும் சேர்ந்திருப் பதாக கூறப்பட்டுள்ளது.

பக்தர்கள் செலுத்திய ரொக்கப் பணம் தவிர, 2.90 கிலோ (ரூ.73 லட்சம்) தங்க நகைகளும், 56 கிலோ (ரூ.18 லட்சம்) வெள்ளி நகைகளும் காணிக்கையாக சேர்ந் துள்ளன. விஐபி தரிசன டிக்கெட் மற்றும் சிறப்பு வழிபாடு டிக்கெட் விற்பனை மூலம் ரூ.3.18 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

கடந்த நிதியாண்டில் கோயில் உண்டியல் வருவாய் ரூ.162 கோடி யாக இருந்தது. அதாவது நாளொன்றுக்கு ரூ.44.38 லட்சம் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டது. ஆனால் பண மதிப்பு நடவடிக்கைக்குப் பின் நாளொன்றுக்கு ரூ.37.92 லட்சமாக உண்டியல் வருவாய் குறைந்தது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x