

பிரதமர் நரேந்திர மோடி இன்று அவரது மக்களவை தொகுதியான வாரணாசிக்கு செல்கிறார்.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு வரும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில் வாரணாசியில் வாக்குச் சாவடி நிலையிலான தொண்டர் களின் கூட்டத்துக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளது. இதில் சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இத் தொண்டர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.
வாரணாசி தொகுதியில் புற்று நோய் மருத்துவமனை, பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உயர் சிகிச்சை மருத்துவமனை ஆகிய வற்றுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இவை தவிர பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.