ஆக்ஸிடோசின் மருந்தை சட்டவிரோதமாக விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை: பிஹார் அரசு எச்சரிக்கை

ஆக்ஸிடோசின் மருந்தை சட்டவிரோதமாக விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை: பிஹார் அரசு எச்சரிக்கை
Updated on
1 min read

பிஹார் மாநிலத்தில் சட்டவிரோத மாக ஆக்ஸிடோசின் மருந்து விற்பனையை மேற்கொள்வார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் சவுத்ரி கூறியுள்ளார்.

பிஹாரில் ஆக்ஸிடோசின் எனும் மருந்து, கால்நடைகளில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், காய்கறிகளின் விளைச்சலை அதிகப்படுத்துவதற்காக பயிர் களிலும் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.

ஆக்ஸிடோசின் பயன்படுத்தப் பட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதால், மனிதர்களின் உடல்நலம் பாதிக்கப்படும். பல் வேறு பக்க விளைவுகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த மருந்து விற்பனையை கட்டுப்படுத்தவும், வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்தும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை கடந்த மார்ச் மாதம் முதல் அமல் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து பிஹாரில், இந்த மருந்து விற்பனைக்குத் தடை விதிப்பதாக மாநில அரசு அறிவித்தது.

எனினும், சட்டவிரோதமாக அந்த மருந்து விற்பனை பிஹாரில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

இந்த பிரச்சினை குறித்து பிஹார் சட்டமன்றத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் எம்.எல்.ஏ. அப்துல் பாரி சித்திக் கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில், “ஆக்ஸிடோசின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையி லும், அந்த மருந்து சந்தையில் எளிதாக கிடைத்து வருகிறது. அதை பயன்படுத்துவது தொடர் பான சந்தேகத்தின் பேரில் இந்தி

யாவிடமிருந்து காய்கறிகளை இறக்குமதி செய்ய ஐரோப்பிய நாடுகள் மறுத்து வருகின்றன. ஆக்ஸிடோசின் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களை சாப்பிட் டால், மனிதர்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. மக்களின் நலன் கருதி, அந்த மருந்தின் பயன்பாட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அதற்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சவுத்ரி கூறும் போது, “கால்நடை மருத்துவமனை களில் மட்டும்தான் ஆக்ஸிடோசின் மருந்தை பயன்படுத்த அனுமதிக்கப் படும் என்ற உத்தரவு கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்டது. அதைத் தவிர வேறெங்கும் அந்த மருந்தை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஆக்ஸிடோ சினை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in