

பொது இடங்களில் குப்பை கொட்டுவோரிடம் 10 ஆயிரம் ரூபாய் வசூலிக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மாநகராட்சிகளால் குப்பைகள் தவறாக கையாளப் படுவதாகவும் குப்பைக் கூடங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:
குப்பைகளைச் சேகரிப்பது, இடம் மாற்றுவது, அவற்றுக்கு தீர்வை ஏற்படுத்துவது ஆகிய வற்றை உறுதி செய்வது ‘திடக் கழிவு மேலாண்மை விதிகள் 2016’-ன் கீழ் அனைத்து அதிகாரி களின் சட்டப்பூர்வ கடமையாகும். ஹோட்டல்கள், இறைச்சிக் கூடங் கள், காய்கறி சந்தைகள் என குப்பைகள் அதிகம் உருவாகும் இடங்களில் அவற்றை விதிகளின் படி தரம்பிரித்து வழங்க மாநக ராட்சிகள் உத்தரவிட வேண்டும்.
எந்தவொரு அமைப்போ அல்லது தனி நபரோ அல்லது குடியிருப்புவாசிகளோ இந்த விதிகளை மதிக்காமல் கழிநீர் கால்வாய்கள் அல்லது பொது இடங்களில் குப்பையை கொட்டி னால், அதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புக்கு இழப்பீடாக ஒவ்வொரு முறையும் ரூ.10,000 வசூலிக்க வேண்டும். டெல்லியில் ஒவ்வொரு நாளும் 9,600 டன் குப்பை உற்பத்தியாகிறது. இதை எதிர்கொள்ள திட்டங்கள் ஏதும் மாநகராட்சிகளிடம் இல்லை.
குப்பைகள் உற்பத்தியாகும் இடங்களிலேயே தரம் பிரிக்கப்பட வேண்டும். குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் மக்கள் மற்றும் அமைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சொத்து வரியில் சலுகை வழங்கலாம். அவ்வாறு வழங்காதவர்களுக்கு அபராதம் விதிக்கலாம். இது தொடர்பான திட்டத்தை ஒவ்வொரு மாநகராட்சி ஆணையர்களும் 1 மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கழிவுகளை முறையாக கையா ளுவதும், அவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்போ, மற்றவர்களுக்கு அசவுகரியமோ ஏற்படாத வகை யில் மாநகராட்சிகளிடம் ஒப் படைப்பதும் குடிமக்களின் கடமை யாகும். இவ்வாறு அந்த உத்தர வில் கூறப்பட்டுள்ளது.