

மும்பை: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் - ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் நடைபெற்ற நிச்சயதார்த்தம் ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்றது.
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லமான அன்டில்லாவில் குஜராத் மாநில பாரம்பரியப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதில், ஷாருக்கான உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, தங்கள் வீட்டுக்கு வர இருக்கும் மருமகளை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி உள்ளிட்ட குடும்பத்தினர் இந்தி பாடல் ஒன்றின் இசைக்கு ஏற்ப ஆடினர். அப்போது, எதிரே அமர்ந்திருந்த ராதிகா மெர்ச்சண்ட் மிகவும் மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே இருந்தார்.
இதேபோல், நிச்சயதார்த்த மோதிரம் அணிவித்த பிறகும் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, விருந்தினர்கள் என அனைவரும் ஆடினர். இதனால், நிச்சயதார்த்த விழா ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என களைகட்டியது. காண புகைப்படத் தொகுப்பு > முகேஷ் அம்பானி இளைய மகன் நிச்சயதார்த்த ஆல்பம்