Published : 20 Jan 2023 06:44 AM
Last Updated : 20 Jan 2023 06:44 AM

மத்திய பிரதேசத்தில் 4-வது மனைவிக்கு முத்தலாக் கொடுத்தவர் மீது வழக்கு

இந்தூர்: நான்காவது மனைவிக்கு முத்தலாக் கொடுத்தவர் மீது மத்திய பிரதேசத்தின் இந்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் இம்ரான்(32). இவருக்கு ஏற்கெனவே 3 மனைவிகள் உள்ளன. இத்தகவலை மறைத்து திருமண இணையதளத்தில் வரண் தேடியுள்ளார். ஏற்கெனவே விவாகரத்தாகி குழந்தைகளுடன் இருக்கும் மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவரை தேர்வு செய்து 4-வது மனைவியாக்கியுள்ளார். அவரது குழந்தைகளையும் சேர்த்து கவனித்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார். இம்ரானுக்கு ஏற்கெனவே 3 மனைவிகள் இருப்பது தெரிந்தவுடன், அவருக்கும், 4-வது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இம்ரான் தனது 4-வது மனைவிக்கு எஸ்எம்எஸ் மூலம் ‘தலாக், தலாக், தலாக்’ என தகவல் அனுப்பியுள்ளார்.

இது குறித்து இந்தூர் போலீஸில் இம்ரானின் 4-வது மனைவி புகார் கொடுத்தார். முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி இம்ரான் மீது இந்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சட்டத்தின்படி முத்தலாக் கொடுத்தவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x