கேரள மாநிலத்தில் உணவகத்தில் சாப்பிட்ட70 பேருக்கு உடல்நலக்குறைவு

கேரள மாநிலத்தில் உணவகத்தில் சாப்பிட்ட70 பேருக்கு உடல்நலக்குறைவு
Updated on
1 min read

கொச்சி: கேரளாவில் உணவகம் ஒன்றில் சாப்பிட்ட சுமார் 70 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவத்தில் தலைமை சமையலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் வடக்கு பரவூரில் மஜ்லிஸ் என்ற உணவகம் உள்ளது. இங்கு கடந்த செவ்வாய்க்கிழமை உணவு சாப்பிட்ட 2 குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 70 பேருக்கு வாந்தி, பேதி உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக பின்னர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த உணவகத்துக்கு உள்ளூர் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் அந்த உணவகத்தின் தலைமை சமையலர் கைது செய்யப்பட்டுள்ளதாக வடக்கு பரவூர் போலீஸார் தெரிவித்தனர்.

உணவுப் பாதுகாப்பு ஆணையரின் அறிக்கையின் அடிப்படையில் உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in