புறப்பாடு நேரம் மாற்றம் | 30-க்கும் மேற்பட்ட பயணிகள் விமானத்தை தவறவிட்டனர்: ஸ்கூட் நிறுவனத்துக்கு நோட்டீஸ்

புறப்பாடு நேரம் மாற்றம் | 30-க்கும் மேற்பட்ட பயணிகள் விமானத்தை தவறவிட்டனர்: ஸ்கூட் நிறுவனத்துக்கு நோட்டீஸ்
Updated on
1 min read

புதுடெல்லி: பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரிலிருந்து சிங்கப்பூருக்கு, அந்நாட்டைச் சேர்ந்த ஸ்கூட் நிறுவனத்தின் விமானம் இயக்கப்படுகிறது. இதில் பயணம் செய்ய சுமார் 300 பேர் டிக்கெட் எடுத்திருந்தனர். இந்த விமானம் நேற்று முன்தினம் இரவு 7.55 மணிக்கு புறப்பட வேண்டும்.

ஆனால், இதன் புறப்படும் நேரம் நேற்று முன்தினம் மாலை 4 மணி என மாற்றப்பட்டது. இதை ஸ்கூட் விமான நிறுவனம், சம்பந்தப்பட்ட பயணிகளுக்கும், டிராவல் ஏஜென்டுகளுக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டது.

ஆனால் ஒரு டிராவல் ஏஜென்சிமட்டும், தனது வாடிக்கையாளர்களுக்கு, விமானம் புறப்படும் நேரம் மாற்றப்பட்ட விவரத்தை தெரிவிக்கவில்லை.

இதனால் 30 முதல் 32 பயணிகள் சிங்கப்பூர் விமானத்தை தவறவிட்டனர். அந்த விமானம் 263 பயணிகளுடன் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.

இச்சம்பவம் குறித்து அறிக்கை அளிக்கும்படி, ஸ்கூட் விமான நிறுவனத்துக்கு, விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து துறை இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விமானத்தை தவறவிட்ட பயணிகளிடம் ஸ்கூட் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in