விக்கிப்பீடியா ஆதாரங்கள் நம்பத் தகுந்தவை அல்ல - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

விக்கிப்பீடியா ஆதாரங்கள் நம்பத் தகுந்தவை அல்ல - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய கலால் கட்டணச் சட்டம், 1985-ன் முதல் ஷரத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட ‘ஆல் இன் ஒன் இன்டகரேட்டட் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின்' சரியான வகைப்பாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறும்போது, ‘‘ஆன்-லைன் ஆதாரங்கள், அறிவின் பொக்கிஷமாக இருந்தாலும், முற்றிலும் நம்பமுடியாத மற்றும் தவறான தகவல்களை ஊக்குவிக்கக் கூடியதாக உள்ளன. விக்கிப்பீடியா போன்ற ஆன்லைன் ஆதாரங்கள் முற்றிலும் நம்பத்தகுந்தவை அல்ல. அதிக நம்பகத்தன்மை உள்ள ஆதாரங்களை நம்பி நீதிபதிகளும், நீதித்துறை சார்ந்தவர்களும் செயல்பட வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in